புதன், 23 செப்டம்பர், 2009

வவுனியா கண்டிவீதி – ரம்யா ஹவுஸில் இயங்கி வந்த யாழ் செல்வதற்கான பாஸ் வழங்குமிடம் ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடிக்கு மாற்றம்

வவுனியா கண்டி வீதியில் ரம்யா ஹவுஸ் இராணுவ சிவில் அலுவலகத்தில் செயற்பட்டு வந்த யாழ் செல்வதற்கான பாஸ் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரில் இருந்து சுமார் 7 அல்லது 8 கிலோ மீற்றர் தொலைவில் இந்த பாஸ் வழங்கும் அலுவலகம் இயங்கி வருவதனால் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். நாளொன்றிற்கு 300 அல்லது 500 பிரயாணிகளுக்கான டோக்கன்களே வழங்கப்படுவதனால், அவற்றைப் பெறுவதற்காகப் பயணிகள் இரவிலேயே அந்த அலுவலகத்தின் முன்னால் கியூவில் காத்து நிற்கும் நிலையில் இந்த இடம் மாற்றம் பல சிரமங்களை பயணிகளுக்கு உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து இரவு தபால் ரயிலில் வருகின்ற பயணிகள் வவுனியா ரயில் நிலையத்தில் இறங்கி காலையிலேயே ரம்யா ஹவுஸ் இராணுவ சிவில் அலுவலகத்திற்கு முன்னால் சென்று டோக்கன் எடுத்து, பாஸ் பெற்று பிரயாணத்தை மேற்கொண்டு வந்தார்கள். தற்போது இந்த அலுவலகம் ஈரப்பெரியகுளத்திற்கு மாற்றப்பட்டிருப்பதனால், வவுனியா நகரில் இருந்து, மூட்டை முடிச்சுகளுடன் அங்கு செல்வதற்கு ஓட்டோவுககான கட்டணமாக 350 ரூபாவிலிருந்து 500 ரூபா வரையில் செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் காலையில் இருந்து பிற்பகல் அல்லது மாலையில் யாழ்ப்பாணத்தை நோக்கி பஸ் வண்டிகள் புறப்படும் வரையில் இந்த அலுவலகத்திற்கு முன்னால் காத்துநிற்க நேரிட்டுள்ளதனால், அங்கு கழிப்பறை வசதிகளோ அல்லது உரிய சிற்றுண்டிச்சாலைகளோ இல்லாமல் அவதியுற நேர்ந்திருப்பதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றி வருகின்ற பஸ் வண்டிகள், பயணிகளை பஸ் நிலையத்தில் இறக்கி விடுவதனால், அவர்கள் வசதியாக ரயில் நிலையத்திற்குச் செல்வதற்கும், பஸ் வண்டிகளில் ஏறி திருகோணமலைக்கோ அல்லது மட்டக்களப்பிற்கோ செல்வதற்கு வசதியாக இருப்பதாகவும், ஆனாலும், யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பயணிகள் பெரும் அலைச்சலுக்கும் சிரமங்களுக்கும் உள்ளாக நேரிட்டிருப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக