ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ஐக்கிய நாடுகள் சபையின் மற்றுமொரு பிரதிநிதி அடுத்தவாரத்தில் இலங்கைக்கு விஜயம்

ஐ.நா சபையின் மற்றுமொரு பிரதிநிதி இலங்கைக்கு அடுத்தவாரம் விஜயம் செய்யவுள்ளார். ஐ.நா சபையின் சிரேஸ்ட உயரதிகாரிகளில் ஒருவரான மேஜர்ஜெனரல் பற்றிக் கமன் என்பவரே இங்கு வரவுள்ளார். ஐ.நாவின் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி ராதிகா குமாரசுவாமியின் விசேட தூதுவராகவே பற்றிக் கமன் இலங்கைக்கு வருகிறார். இவர் தமது விஜயத்தின்போது வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள சிறுவர்களை நேரில் சென்று பார்வையிடுவார். இலங்கையரசு இதற்கான அனுமதியை இவருக்கு வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக