ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

பாதுகாப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் தங்கியிருந்த சந்திரிகா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நேற்று சென்னையில் பாதுகாப்பு காரணமாக விமான நிலையத்திலேயே இரண்டு மணிநேரம் தங்கியிருந்து கொழும்பு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, தனிப்பட்ட முறையிலான பயணமாக, கேரளா சென்றிருந்தார். தனது பயணத்தை முடித்து விட்டு, இலங்கை திரும்புவதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்தார்.
அங்கே சந்திரிகாவிற்கு, விமான நிலையத்தின் அருகில், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் எதிர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் என புலனாய்வு அறிக்கைகளினால், சென்னை விமான நிலையத்திலேயே இரண்டு மணிநேரம் காத்திருந்து, கொழும்பு புறப்பட்டார்.
இதேவேளை, கொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சந்திரிகா, தாம் ஆட்சியில் இருந்த போது முதலில் பேச்சுவார்த்தைக்கே முதலிடம் கொடுத்ததாகவும் யுத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக