ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மேலும் கடுமையாக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

பயங்கரவாதத் தடுப்புச் சட்ட ஏற்பாடுகளை மேலும் கடுமையாக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது நாட்டில் அமுலில் உள்ள சட்ட திட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தி கடுமையான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட வேண்டும் என நீதி அமைச்சர் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளது. பயங்கரவாத சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று எதிர்வரும் 28ம் திகதி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளது. அமெரிக்க மற்றும் பிரிட்டன் நீதிமன்ற கட்டமைப்பைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக