புதன், 23 செப்டம்பர், 2009

எதிர்க்கட்சிகளின் உத்தேச கூட்டணியில் 15ற்கும் அதிகமான கட்சிகள்.. -ஐ.தே.கட்சி!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கின்றமையை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படவிருக்கும் எதிர்க்கட்சிகளின் உத்தேச கூட்டணியில் 15ற்கும் அதிகமான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்துகொள்ளும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் உத்தேச கூட்டணியை அமைப்பது தொடர்பாக சுமார் ஐந்து கட்சிகள் ஐ.தே.கவுடன் ஆரம்பத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளும். நாளடைவில் 15ற்கும் அதிகமான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இக்கூட்டமைப்பில் இணையும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இக்கூட்டமைப்புக்குத் தலைவராக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இருப்பார் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக