புதன், 23 செப்டம்பர், 2009
மற்றுமொரு ஐநா பிரதிநிதி இன்று இலங்கை வருகின்றார்
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் விசேடப் பிரதிநிதியான வோல்டர் கெலின் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார். வடபகுதியில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை இவர் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அரச தரப்புப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வோல்டர் கெலின் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த இரண்டாவது ஐக்கிய நாடுகள் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக