செவ்வாய், 22 செப்டம்பர், 2009

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, கே.பி.யின் சகாவான தமிழ் பொறியியலாளர் ஒருவர் கைது

சிங்கப்பூரில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, தமிழ் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த இரட்ணசேகரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இவர் கொழும்பிலுள்ள தமது உறவினரை பார்க்க வந்ததாக கூறினாரென கூறப்பட்டுள்ளது. எனினும் பாதுகாப்பு தரப்பின் தகவல்படி இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி என்கிற குமரன் பத்மநாதனின் நெருங்கிய சகா என்றும் குமரன் பத்மநாதனுக்கு சொந்தமான தனியார் கப்பலில் பணியாற்றியவரென்றும் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக