செவ்வாய், 22 செப்டம்பர், 2009

ஒரே முறையில் 1072 கடற்படையினர் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறினர்!

இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக ஒரே முறையில் 1072 கடற்படையினர் தமக்கான பயிற்சியை முடித்துக்கொண்டு ஞாயிறன்று வெளியேறியுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தி்ல் உள்ள பூனாவை கடற்படைத்தளத்தில் இடம்பெற்ற இதற்கான வைபவத்தில் முக்கிய விருந்தினராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க கலந்து கொண்டார்.
பல்வேறு பயிற்சித் தளங்களிலும் 25 வாரப் பயிற்சியை முடித்துக் கொண்டு இவர்கள் வெளியேறியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு வெவ்வேறு சம்பவங்களின்போது திரட்டப்பட்டவர்களுக்கே இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. புதிய கடற்படையினர் பயிற்சி முடித்து வெளியேறிய இந்த வைபவத்தில் மதத் தலைவர்கள், கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பணிப்பாளர் நாயகம் தரத்திலான அதிகாரிகள், கடற்படையின் உயரதிகாரிகள், இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களின் குடும்பத்தினர் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டார்கள்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக