ஞாயிறு, 24 மே, 2015

வலி மேற்கில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.!(படங்கள் இணைப்பு)


கடந்த 18.05.2015 அன்று சுழிபுரம் கல்விழான் காந்திஜி சனசமூக நிலையத்தில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு மாலை 6.30 மணியாறில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். கௌரவ.ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ.பா.கஜதீபன் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். முன்னதாக மங்கள விழக்கினை சர்வதேச இந்து குரமார் ஒன்றிய தலைவர் சபா.வாசுதேவக்குருக்கள் மற்றும் தென் இந்திய தேவாலய குரு. இறைபணி செபஸ்டியன் அன்டனி அவர்களும் மங்கல விழக்கினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்தது வைத்தனர். தொடர்ந்து அரசியல் பிரமுகர்களும் மங்கல விழக்கினை ஏற்றினர். தொடர்ந்து முள்ளிவாய்காலில் பிரிந்த எம் உறவுகளுக்கு ஈகைச்சுடரினை  நிகழ்வில் கலந்து கொண்ட தழிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் ஏற்றி அகவணக்கத்தினை நிகழ்த்தினர்.

இவ் நிகழ்வின் பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட சர்வதேச இந்து குரமார் ஒன்றிய தலைவர் சபா.வாசுதேவக்குருக்கள் மற்றும் தென் இந்திய தேவாலய குரு. இறைபணி செபஸ்டியன் அன்டனி அவர்களும் ஆசியுரையினை வழங்கினர்,
தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில் இன்றைய இவ் புனித நாள் எமது வரலாற்றின் திருபபு முனைக்குரிய நாள் இனறு காலை முதல் பல்வேறு இடங்களிலும் பல நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து இவ் இடத்தில் இறுதி நினைவேந்தல் நிகழ்வுக்காக கூடியுள்ளோம். இன்று காலை முள்ளிவாய்கால் பகுதியில் எமது நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்ற பேது ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசிய்ல் பிரமுகர்கள் கலந்த கொண்டனர் அவ் நினைவிடத்தில் நின்ற போது எமது மனம் இறுதி நாள் நிகழ்வுகளின் கோரங்களை பிரதிபலித்தது. இது எம்தேசம் இது எம் நாடு போன்ற நினைவுகள் எம் மனத்தில் ஒலித்தபேது உணர்வுகள் எல்லை மீறியது. எமது பன்பாட்டின் வழியில் இறந்த எம்மவர்கட்கு ஆண்டு தோறும் வணக்கம் செலுத்தி அவர்களை நினைவு கூறுவது எமது கடமை. இந்த வகையில் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக காற்றோடு காற்றாக கடல் அலையோடு அலையாக எம் மத்தியில் இல்லாது போய் விட்ட எம்மவர்களை உணர்வுடன் இவ் இடத்தில் பூசிப்போம் வணங்குவோம். அவர்கள் வாழ்ந்த காலங்கள் மற்றும் அவர்கள் வழ்ந்த நிலைகளை நேசிப்போம். வரலாறு எமது வழிகாட்டி அதன் வழி எங்கள் இனத்தினை என்றும் நாம் நேசிக்க வேண்டம் இன்று எத்தனையே அச்சங்கள் மத்தியிலும் இங்கும் சரி முள்ளிவாய்காலிலும் சரி மக்கள் உணர்வோடு கலந்து சிறப்பித்தமை என்பது மக்கள் எம் இனத்தின் விடுதலை மீது கொண்டுள்ள பற்றுறுதியின் வெளிப்பாட்டை காட்டி நிற்கின்றது. இதற்கும் மேலாக எமது எப்படியும் வாழலாம் என்ற இனம் அல்ல இப்படித்தான் வாழ் வேண்டும் என்ற பற்றுறுதியினைக் கொண்வர்காகள இன்றும் வாழ்ந்து வருகின்றோம். எதிரியை விட மிக மோசமனவர்கள் துரோகிகள் இந்த வகையில் அண்மையில் புங்குடுதீவில் கூட்டு பாலியல் வண்முறைக்கு உடபடுத்தப்பட்டு கொல்லப்பட்ட மாணவிக்கு ஒவ் வோர் பாசாலையும் அஞ்சலி செலுத்துவதற்கு முன்பட்ட வேளை மிக hநசூக்காக மிரட்டப்பட்டுள்ளனர் பலர் இவ் ஈனச்செயலை எமது எதிரி செய்தால் வேறு எமது இனம் என்ற போர்வையில் துரேகத்தனத்துக்கும் பல சமூகவிரோத செல்களுக்கும் துணை போனவர்கள் மேற்கொள்வது என்பது மிக வேதனையான ஒன்றாகும். உண்மையான மறத்தழிழன் உடலில் பாயும் குருதி என்பது என்று உணர்வின் வழி வாழ வழிவகுக்கும் இன்று உணர்வோடும் பற்றோடும் இவ் நிகழ்விற்கு வழி சமைத்த அனைத்து விடுதலை நோக்கிய கரங்களுக்கும் தேசியத்தின் சார்பில் நன்றிகளை கூறி விடைபெறுகின்றேன் என குறிப்பிட்டார்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக