சனி, 23 மே, 2015

திருமலையில் மகளிர் அமைப்புகள் கவனயீர்ப்பு.!!

புங்குடுதீவு மாணவியின் வன்புணர்வு படுகொலையைக் கண்டித்து திருகோணமலையில் மகளிர் அமைப்புகள் சில ஒன்றிணைந்து அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள மகளிர் அமைப்புகள் சில ஒன்றிணைந்து திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் காலை 8.30 அளவில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், பெண்களின் உரிமைகளை வலியுறுத்தியும் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, முற்றவெளி மைதானத்திலிருந்து பேரணியாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டக்கார்கள் செல்வதற்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.
மைதானத்திற்குள் மாத்திரம் அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபடுமாறு மகளிர் அமைப்புகளிடம் திருகோணமலை பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
இந்த நிலைமையின் கீழ் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் ஆளுநர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மஹஜர் ஒன்றைக் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக