ஞாயிறு, 24 மே, 2015

கொலன்னாவ ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரை பிரயோகம்.!

கொலன்னாவ – மீதொட்டமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் குப்பைக் கழிவுகளைக் கொட்டுவது நிறுத்தப்படும் என எழுத்து மூலம் அதிகாரிகள் உறுதி மொழி வழங்க வேண்டும் எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை குவிக்கும் இடத்திற்கு முன்பாக அப் பிரதேசமக்கள் கூடி இவ்வாறு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

சுமார் 700 மெற்றிக் தொன் குப்பைகள் நாளாந்தம் அந்தப் பகுதியில் கொட்டப்படுவதாகவும் அதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பாக குப்பை மேடுகள் வீடுகளில் சரிந்து விழுதல் மற்றும் சுகாதார சீர்கேடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக