செவ்வாய், 26 மே, 2015

சம்மாந்துறையில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு,

சம்மாந்துறை கோரக்கர்கோயில் தமிழ் மகாவித்தியாலயத்தில் க.பொ.த.சா.தரம் பயிலும் மாணவியான கனகசூரியம் நிலக்சிகா(15) நேற்று தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
கோரக்கர்கோயில் உதயபுரம் தமிழக்குறிச்சி 4ஆம் பிரிவிலுள்ள அவரது வீட்டிலேயே தூக்குப்போட்டு உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்ற சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.கருணாகரன் தூக்கில் தொங்கிய மாணவியைப் பார்வையிட்டு அறிக்கையிட்டார்.

காலையில் நிலக்சிகாவின் தாயார் வேலைக்கு சென்றிருந்தார்.அண்ணனும் தம்பியும் பாடசாலைக்குச் சென்றிருந்தனர். இவர் பாடசாலை செல்வதாகக்கூறிவிட்டு வீட்டிலேயிருந்திருக்கிறார். அச்சமயமே அவர் தூக்குப்போட்டிருக்கக்கூடுமெமென சந்தேகிக்கப்படுகிறது.
பாடசாலைவிட்டு 1.40 மணியளில் வீடு வந்தபோதுதான் சம்பவம் வெளியே தெரிந்ததாக கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக