
பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வரவு அமைச்சர்களின் மனமாற்றத்துக்கு காரணமாக அமைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களும் ராஜபக்ஷவினரிடம் மட்டுமே குவிந்து கிடக்கும் நிலையில், தாம் பெயரளவுக்கு அமைச்சராக இருக்க நேர்ந்துள்ளதாக அமைச்சர்கள் சிலர் தற்போது வெளிப்படையாகவே கருத்துத் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவாக பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்து கொள்ள அமைச்சர்கள் பலர் முடிவு செய்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் ஜனாதிபதி தரப்பு சற்று ஆடிப்போயுள்ளது. அமைச்சர்களின் கட்சி தாவலை தடுக்க ஜனாதிபதி தற்போது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக சந்தேக பட்டியலில் இருக்கும் அமைச்சர்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மூலம் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு வருகின்றது. மேலும் ஒரு சில அமைச்சர்களை அலரி மாளிகைக்கு வரவழைத்தும், வேறு சிலரை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்றும் ஜனாதிபதி தரப்பினர் அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் உரிய நேரம் வரும்போது அமைச்சர்கள் கட்சி தாவும் முடிவில் தீர்க்கமாக இருப்பதுடன், ஹெல உறுமய, சோபித தேரர் ஆகிய தரப்பினருடனான தொடர்புகளையும் துண்டித்துள்ளனர். இவர்கள் ஆளுங்கட்சிக்கு மறைமுக ஆதரவுடன் நாடகமொன்றை மேடையேற்றிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர்களில் பலர் விமர்சித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக