வெள்ளி, 14 நவம்பர், 2014

திருகோணமலையில் நாளை ஆட்பதிவுத் திணைக்கள நடமாடும் சேவை..!!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் நடமாடும் சேவை நாளை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்ற தகவல் அண்மையில் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக எதிர்வரும் தேசிய தேர்தல்களின் போது அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும் அபாயம் எதிர்நோக்கப்பட்டிருந்தது.

இந்நிலையைக் கருத்திற் கொண்டு சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான அமைப்பு (கபே) தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. மனித உரிமைகள் ஆணையத்திடமும் இது தொடர்பில் முறையிட்டிருந்தது.

இதன் பயனாக கபே அமைப்புடன் இணைந்து நாளை திருகோணமலையில் நடமாடும் சேவை ஒன்றை நடத்த ஆட்பதிவுத் திணைக்களம் முன்வந்துள்ளது.



இதில் கலந்து கொள்பவர்களுக்கு புகைப்படம், முத்திரைச் செலவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மேலும் இரண்டு வாரத்திற்குள் அவர்களுக்கான ஆளடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவி கபே அமைப்பின் கோரிக்கையின் பேரில் யூஎஸ் எயிட் நிறுவனம் வழங்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக