
கொழும்பு நகரப் பகுதியில் இன்று மாலை நேரம் சற்றும் எதிர்பாராத வகையில் கடுமையான மழை கொட்டத் தொடங்கியுள்ளது. நகரின் பெரும்பாலான பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக கொழும்பு நகரின் பெரும்பகுதி தற்போது இருளில் மூழ்கியுள்ளது.
நகரைச் சூழ்ந்துள்ள இருள் மற்றும் வெள்ளம் என்பவற்றுக்கிடையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதால் அலுவலகங்களை விட்டு வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் அவதியை எதிர்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக