கனடாவின் ஓட்டாவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகம், தம்முடன் தொடர்புகொண்டு, தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்ட இலங்கையர் தொடர்பான நிலவரங்களை அறிவித்துள்ளதாக கனேடிய தமிழ்ப் பேரவை தெரிவித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டவர்களில் சுமார் 126பேர் அகதிகளாகப் புகலிடம் கோரியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் நான்கு வயதுக்கு உட்பட்ட18 குழந்தைகளில் இரு மாதம் நிரம்பிய குழந்தை ஒன்றும் அடங்குகின்றது. 21 பெண்களும் 15 ஆண்களும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாவர். 4 கர்ப்பிணித் தாய்மார்களும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிட்டுள்ளதோடு அவர்களுக்கான உதவிகளையும் வழங்கி வருகின்றனர். எந்த ஒரு அகதிக் கோரிக்கையாளரும் கம்பிகளுக்குப் பின் வைக்கப்பட்டிருத்தல் கூடாது என்றும் தேவையானதை விட அதிகமான நேரம் வைக்கப்படக் கூடாது எனவும் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகளுக்கான ஆணையம் நம்புகின்றது என்று பேரவை மேலும் தெரிவித்துள்ளது.
வெள்ளி, 15 அக்டோபர், 2010
தாய்லாந்தில் கைதான அகதிகள் தொடர்பில் கவனம்..!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக