வெள்ளி, 22 மே, 2015

யாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் : வடக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு.!

யாழில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 129 சந்தேக நபர்கள் சார்பாகவும் எந்தச் சட்டத்தரணிகளும் நீதிமன்றில் முன்னிலையாவதில்லையென வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.


கடந்த வாரம் புங்குடதீவில் மாணவி மீது மேற்கொள்ளப்பட்ட காட்டு மிராட்டித் தனமான சம்பவத்தினை கண்டித்து குடாநாடு பூராகவும் நேற்றைய தினம் குடாநாட்டில் இடம்பெற்ற கதவடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களின் போது அரச சொத்துக்கள் மற்றும் நீதிமன்றம் மீது மேற்கொண்ட தாக்குதல் குற்றச் சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட 129 சந்தேக நபர்கள் சார்பாக வடமாகாண சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் முன்னிலையாவதில்லையெனவும் இச் செயல்களைக் கண்டித்து நாளைய தினம் 22 ஆம் திகதி நீதி மன்ற நடவடிக்கைகளிலும் பங்கு கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக