வியாழன், 21 மே, 2015

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த வர்த்தக சங்கத்தின் தலைவர் பொலிசாரால் கைதாகி, நீதிமன்றால் பிணையில் விடுதலை.!

யாழில்  வித்தியா படுகொலைக்கு நீதி கோரி, வவுனியாவில் இன்றையதினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்களில் ஒருவரான  வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம் இன்று வவுனியா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக வர்த்தக சங்கத்தலைவர் தெரிவிக்கையில்-

புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து வவுனியாவில் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடும் முகமாக  நேற்றைய தினம் ஒலிபெருக்கியில்
விளம்பரப்படுத்தியமைக்கு பொலிஸாரிடம் அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து இன்று பொலிஸார் என்னையும்  ஏனைய இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர் என தெரிவித்தார்.

இதன் போது வர்த்தகர் சங்க தலைவர் ரி.கே.இராசலிங்கம் மற்றும் வர்த்தக சங்க அலுவலக உத்தியோகத்தர் விக்டர், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட முற்சக்கரவண்டியின் ஓட்டுனர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது சட்டத்தரணிகள் அனைவரும் வர்த்தக சங்க தலைவர் மற்றும் ஏனையோருக்கும் சார்பாக தமது வாதங்களை முன்வைத்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக