வியாழன், 14 மே, 2015

யாழில் நடைபெற்ற விழிப்புலனற்றோரின் துடுப்பாட்ட போட்டி.!(படங்கள் இணைப்பு)

அண்மையில் யாழ் சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரி மைதானத்தில் யாழ் மாவட்ட விழிப்புலன் அற்றோர் சங்கத்திற்கும் கிழக்கு மாகாண விழிப்புலன் அற்றோர் சங்கத்திற்கும் இடையே துடுப்பாட்ட நிகழ்வு இடம் பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்த அதே வேளை
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சமூகசேவைகள் பணிப்பாளர் திருமதி.நளாயினி.இன்பராஜ் மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் உதவிப்பணிப்பளர் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். காலை 9.00 மணியளவில் இரு அணியினருக்கும் இடையேயான துடுப்பாட்ட நிகழ்வினை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து மாலை இடம் பெற்ற பரிசளிப்பு நிகழ்விக் போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது இவ் நிகழ்வில் கலந்து கொண்டமையை இட்டு மட்டற்ற மகிழ்வு அடைகின்றேன். முன்னதாகவே இவ்வாறான நிகழ்வு என அறிந்திருந்தால் இன்னும் பல ஒழுங்குகளை மேற்கொண்டிருக்க முடியும் இருப்பினும் மிகச் சிறப்பாக இவ் நிகழ்வு இடம் பெற்றிருப்பது பாராட்டக் கூடிய ஒர் விடயம் ஆகும்.ஒவ் வொரு மனிதர்களும் பல்வேறு இலட்சியங்களை அடைவதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சிக்கின்றனர். இந்த வகையில் இன்று இந்த இடத்தில் நடைபெற்ற இந்த துடுப்பாட்ட நிகழ்வு எம் எல்லோருக்கும் மிகுந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. .இயலாது என்று எதுவும் இல்லை என்பதனை இன்று இவர்கள் இவ் இடத்தில் எடுத்துக்காட்டி உள்ளனர். இன்று பலரும் ஒரு சிறு இயலாமை அல்லது நோயால் பாதிக்கப்பட்டார்கள் ஆனால் அவர்கள் படுகின்ற வேதனை மிக அதிகமாக உள்ள நிலையில் இன்றைய இவ் நிகழ்வு எல்லோருக்கும் முன்மாதிரியன ஒன்றாகவே கொள்ள முடியும். சுழன்று வரும் பந்தின் ஒசையை செவிமடுத்து அதன் திசையை திருப்பும் இவ் வீரர்களின் திறமை மிக மிக பாராட்ட கூடிய ஒன்றாகவே கொள்ள முடியும். எதிர் வருங்காலங்களில் இவ்வாறு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு என்னால் ஆன முழுமையன ஒத்துளைப்பை வழங்குவென் இதற்கும் மேலாக மேலும் உங்கள் திறமைகளை வழர்துக் கொள்ள என்றும் ஒத்துளைப்பேன் என கூறினார்.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக