ஞாயிறு, 8 மார்ச், 2015

மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக கண்டியில் நடைபெற்ற  கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திர்க கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.



முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய வேண்டுமென வலியுறுத்தும் வகையில் சில கட்சிகள் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உதாசீனம் செய்து சிலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் எனவும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக