
500 மெகாவொட் மின்சாரத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்க்கும் நோக்கில் இந்த புதிய மின் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்திய நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு அருகாமையில் இந்த புதிய அனல் மின் நிலையம் அமைகப்படவுள்ளது.
அனல் மின் நிலையத்தை அமைக்க ஜப்பான் கடனுதவி வழங்க உள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த அனல் மின் நிலையத்திற்கு ஜப்பான் கடனுதவி வழங்கிய போதிலும் நிறுவனத்தின் உரிமை முழுக்க முழுக்க இலங்கை மின்சார சபையிடம் காணப்படும்.
மின் நிலையத்தை அமைப்பதற்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதியில் மக்கள் குடியேற்றப்பட்டால் சிக்கல் நிலைமைகள் உருவாகக் கூடும்.
ஏற்கவே இந்தப் பகுதியில் கைத்தொழிற்சாலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட சில காணிகள் மீள்குடியேற்ற அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரித்துள்ளார்.
புதிய அனல் மின் நிலையம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக