செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜனாதிபதி பிரசாரம் செய்யமாட்டார் லக்ஸ்மன் கிரியெல்ல நம்பிக்கை...!!!

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்ட மாட்டார் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த எதிர்ப்பார்ப்பை வெளியிட்டார்.

மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் என்ற போதிலும் அவரின் வெற்றியை ஐக்கிய தேசியக்கட்சி உறுதிப்படுத்தியது என்றும் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு நடைமுறை அரசாங்கத்தை மைத்திரிபால
சிறிசேன தோற்கடிப்பார் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் அது நடக்காது என்று தாம் நம்புவதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக