புதன், 18 பிப்ரவரி, 2015

புளொட் அமைப்பின் மறைந்த செயலதிபரின் பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கலும்...(படங்கள் இணைப்பு)

புளொட் அமைப்பின் மறைந்த  செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக தமீழீழ மக்கள்   விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) ஆகியவற்றின் ஊடகப் பிரிவால் "புறப்பட்ட புரட்சிப் புயலின் தலைவன் உமா மகேஸ்வரன் ,
ஈழ விடுதலைப் போரினை இதயத்தில் சுமந்த விடுதலை சூரியன், எங்கள் உமா மகேஸ்வரன்" எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.  இவ் பாடலுக்கான அனுசரணையினை புளொட் அமைப்பின் அமெரிக்க மற்றும் பின்லாந்து கிளைகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் மறைந்த  செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக வவுனியா பெரியமடு அம்பாள் வித்தியாலயத்துக்கான ஒருதொகை கற்றல் உபகரணங்கள் வித்தியாலய அதிபர் திரு த.அகிலன் அவர்களிடம் இன்றையதினம்(18/02/2015) கையளிக்கப்பட்டது. இவ் கற்றல் உபகரணங்கள்  புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையின் தோழர் செல்வபாலன் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு எஸ்.சஞ்சீவன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாடலின் இணைப்பு- https://www.youtube.com/watch?v=Pg5L7_wDX5U











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக