வியாழன், 19 பிப்ரவரி, 2015

இரண்டு வாரங்களில் அரிசியின் விலையை குறைக்க முடியும் அரசாங்கம்..!!!

இரண்டு வாரங்களில் அரிசியின் விலையை குறைக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இம்முறை பெரும் போகத்தில் 50 ரூபா உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய முடியும் எனவும், இதன் ஊடாக அரிசி விலை குறையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல் சிறிய நடுத்தர அரிசி ஆலையாளர்களிடம் வழங்கி, சந்தைக்கு அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அரிசியை சந்தைக்கு விநியோகம் செய்வதன் மூலம், அரிசி விலையை குறைக்க முடியும்.


எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் அரிசியின் விலை 70 முதல் 80 ரூபாவிற்குள் பேண முடியும் என உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக