வியாழன், 19 பிப்ரவரி, 2015

வீடமைப்பு அமைச்சில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன சஜித் பிரேமதாச...!!!

வீடமைப்பு அமைச்சில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இவ்வளவு காலமும் வீடமைப்பு அமைச்சில் நடுப் பகலில் மக்கள் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளை அமைப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய பாரியளவு பணத்தை கடந்த அரசாங்கம் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் கடுமையான மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

அரச பொறியியலாளர் திணைக்களத்தில் மட்டும் 33 வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தி தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.


வீடமைப்பு அதிகார சபை 15 வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த பாரிய கொள்ளைகளை நான் தடுத்து நிறுத்தினேன் என சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக விமல் வீரவன்ச கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக