ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

மகிந்த மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சகல விதமான சலுகைகளும் ரத்து..!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான  அதிகாலை அலரிமாளிகையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் அரச விரோத சூழ்ச்சியில் சம்பந்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்குரிய வரப்பிரசாதங்கள் இழக்கப்பட நேரிடுமென சட்டத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய குழுவினர் மேற்கொண்டதாக கூறப்படும் சதி முயற்சிக்கான விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனை அறிக்கை வெளியானவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னகர்த்தப்படும் என தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக