சனி, 14 பிப்ரவரி, 2015

அமைச்சு வாகனங்களை பகிர்வதில் இரண்டு அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாடு..!!!

அமைச்சு வாகளங்களை பகிர்ந்து கொள்வதில் இரண்டு அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கால்நடை வள அமைச்சின் பொறுப்புக்கள் இரண்டு அமைச்சர்களுக்கு இடையில் பகிரப்பட்டுள்ளது.

பழனி திகாம்பரம் மற்றும் பீ. ஹரீசன் ஆகிய இருவருக்கும் இந்த அமைச்சுப் பொறுப்பு பகிரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இந்த அமைச்சின் பொறுப்புக்களை ஆறுமுகன் தொண்டமான் வகித்து வந்தார்.

அமைச்சின் சொகுசு ரக வாகனங்கள் அனைத்தையும் அமைச்சர் ஹரிசனும் அவரது அதிகாரிகளும் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் பழனி திகாம்பரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


இதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் முறைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக