புதன், 11 பிப்ரவரி, 2015

ஜனாதிபதி செயலக வாகனங்களை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை மன்னிப்பே கிடையாது பொலிஸ் தலைமையகம்....!!

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 749 வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பலரும் வாகனங்களை ஒப்படைத்தனர். சிலர் வெளிநாடு சென்றதால் அதற்குப் பதிலாக வேறுநபர் ஊடாகவும் வாகனங்கள் ஒப்படைக்கப் பட்டன. சில இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் வாகனங்கள் மீட்கப்பட்டன.


இந்நிலையில் நேற்று 10 ம் திகதி வரையில் 21 வாகனங்கள் இன்னமும் காணாமற் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே நேற்று முதல் ஜனாதிபதி செயலக வாகனங்களை வைத்திருப்போருக்கு மன்னிப்பு வழங்கப்படுவதில்லை என பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.

அரசாங்க வாகனத்தை சட்ட விரோதமாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.

இன்று முதல் வாகனத்தை ஒப்படைப்பார்கள் என்று கருதாமல் சட்ட விரோதமாக வைத்திருந்தார்கள் என்றே கருதப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக