புதன், 11 பிப்ரவரி, 2015

ஐதேக அரசின் ஊழல் மோசடிகள் குறித்து 10 ஆண்டுகளின் பின்னர் விசாரணை செய்வது நகைப்பிற்குரியது ராஜித...!!!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் பத்து ஆண்டுகளின் பின்னர் விசாரணை நடத்த மேற்கொள்ளும் முயற்சி நகைப்பிற்குரியது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நிறுவுகின்றமை நகைப்பிற்குரியது.

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசியல்வாதிகள் ஊழல் மேசாடிகளில் ஈடுபட்டிருந்தால் பத்துஆண்டுகள் வரையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மற்றும் அரசாங்கப் பலத்தைக் கொண்டிருந்த பத்து ஆண்டு காலமாக இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் புதிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்ததன் பின்னரே, சுதந்திரக் கட்சிக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஊழல் பற்றி ஞாபகம் வந்துள்ளது என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசியக் கட்சியின் கடந்த கால அரசாங்கத்தின் மோசடிகள் குறித்து சுதந்திரக் கட்சி முறைப்பாடு செய்ய உள்ளதாக தகவல்கள் பற்றி அமைச்சரிடம் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக