தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்திய மீனவர்களின் வடக்கு கடல் அத்துமீறல்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 15ஆம் திகதியன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
வடக்கு கடலில் பல்வேறு தடவைகளாக இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் இடம்பெற்றன. இதனை தடுக்க இரண்டு கட்ட பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் அதில் இணக்கங்கள் காணப்படவில்லை.
இந்தநிலையில் இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை ஒன்றை தாம் முன்வைத்தாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக