வெள்ளி, 23 ஜனவரி, 2015

புதிய பாதுகாப்பு செயலாளரிடம் விளக்கம் கோரிய ஜனாதிபதி..!!

புதிய பாதுகாப்பு செயலாளரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கணக்கு ஒன்று தொடர்பில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலேயே புதிய பாதுகாப்பு செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இந்தக்கணக்குகள் தொடர்பில் இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு செயலாளரும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில் நாட்டின் நிதிக்கொள்கைகள் தொடர்பில் இராணுவப் பேச்சாளருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


இதேவேளை போர் ஒன்று இடம்பெறாமை காரணமாக முப்படைக்களிலும் உள்ள பேச்சாளர்களை பதவி விலக்குவது தொடர்பில் அமைச்சரவை ஆராய்வதாக ராஜித குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக