
இந்தநிலையில் நல்லாட்சி என்றுக்கூறி பதவிக்கு வந்த புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்காக தாம் வருந்துவதாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் போது கடந்த 9 ஆம் திகதி அதிகாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்பட்டதாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தில் 7 வருடங்கள் பணியாற்றியவன் என்ற அடிப்படையில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவு வெளியிடும் வகையில் முன்னாள் ஜனாதிபதி அழைத்தமைக்கு இணங்க அலரி மாளிகைக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம், அதிகாலை 3 மணிக்கு அலரி மாளிகைக்கு சென்ற போது மஹிந்த ராஜபக்ச தமக்கு பின்னர் ஜனாதிபதியாக வருபவரிடம் அதிகாரத்தை கையளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்தே ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட்டு அவருடன் முன்னாள் ஜனாதிபதி கலந்துரையாடியதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனவே 9ஆம் திகதி அதிகாலை வேளையில் எவ்வித குற்றச்செயல்களுக்கும் திட்டமிடப்படவில்லை என்று தாம் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக பீரிஸ், தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக