வியாழன், 15 ஜனவரி, 2015

ஆலோசனைக் குழுவின் தாமதத்துக்கு பெரும்பான்மை பிரச்சினையே காரணம் ரணில்..!!

புதிய அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்படவிருந்த தேசிய ஆலோசனைக் குழு இன்னும் அமைக்கப்படாமைக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையின்மையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை தமது நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

 புதிய அரசாங்கத்தின் அட்டவணைப்படி ஜனவரி 12ஆம் திகதியன்று குறித்த குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். குறித்த குழுவில் அனைத்துக் கட்சிகளினதும் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற பெரும்பான்மையின்மை காரணமாகவே தாமதம்
ஏற்பட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 25 ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
எனினும் மேலும் பலர் வந்துசேருவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களை கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் மைத்திரிபாலவின் புதிய அரசாங்கம் உள்ளது. இருப்பினும் இன்னும் இரண்டு நாட்களில் இந்தப்பிரச்சினைக்கு தீர்வுக் காணப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக