ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித தேவரப்பெரும, அஜித் மானப்பெரும மற்றும் புத்திக பத்திரண ஆகியோர் மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை இன்னும் ஏற்கவில்லை.
இதுவரை பதவி ஒன்றை பெற்றுக் கொள்ளாத துனேஸ் கன்கந்த நகர அபிவிருத்தித்துறை பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள நிலையிலேயே நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
எனினும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிரதியமைச்சு பதவி விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் ராமநாயக்க பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்டவர் என்ற அடிப்படையில், அவருக்கு அமைச்சு பொறுப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிரதியமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.
எனினும் பாலித தேவரப்பெரும மற்றும் புத்திக பத்திரன ஆகியோர் ஒழுக்காற்று நிலையில் உள்ளமையால் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படமாட்டாது.
அஜித் மானப்பெரும புதியவர் என்பதால் அவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக