ஞாயிறு, 18 ஜனவரி, 2015

நிமால் சிறிபால டி சில்வாவே பிரதமமந்திரி வேட்பாளர்..!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் பிரதம மந்திரி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவே போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பின்னர் அவர் கட்சியின் பிரதமமந்திரி வேட்பாளராக போட்டியிடாமல் ஜனாதிபதி பதவியை நீடிப்பார்.

அதேநேரம் முன்னர் கூறப்பட்டதைப் போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரி பதவிக்காக போட்டியிடமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த தடவை தமது சொந்த கை சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக