ஞாயிறு, 18 ஜனவரி, 2015

மைத்திரிக்கு எதிரான முன்னாள் அமைச்சர்கள் பலர் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவு..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க எதிரணியிலுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முன்வந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு எதிராகச் செயற்பட்ட பலரும் இவ்வாறு புதிய அரசுடன் கைகோர்த்துச் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதில் கட்சிகள் பலவற்றினதும் தலைவர்கள் உள்ளடங்குகின்றனர்.

முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான்,

முன்னாள் அமைச்சரும், ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும், செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா,


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  விமல் வீரவன்ச,

முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன,

முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உட்பட பல தலைவர்களும் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

அரசியமைப்பில் மாற்றம், தேர்தல் சீர்திருத்தங்கள், வாழ்க்கைச் செலவு குறைப்பு, எண்ணெய் விலைகளின் குறைப்பு, தோட்டப்புற மக்களுக்கு வீட்டு வசதிகள், வடபகுதிக்கு பல்வேறு திட்டங்கள் போன்ற பல்வேறு நல்ல விடயங்கள் இந்த 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்கவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக