செவ்வாய், 30 டிசம்பர், 2014

வவுனியாவில் வட மாகாண சபை வெள்ள நிவாரண பணிகளில்.!! (படங்கள் இணைப்பு)

வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கான நிவாரண பணிகளுக்காக வட மாகாண சபையினால் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் ஒரு அங்கமாக வவுனியா ஆசிபுரம் கிறிஸ்தவ தேவாலய நலன்புரி நிலையத்தில் வைத்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  வழங்கப்பட்டது. 

இதில் வட மாகாண சுகாதார அமைச்சர் திரு.ப.சத்தியலிங்கம், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களான ரோய் ஜெயக்குமார், கருணாநிதி ஆகியோர் கலந்து மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக