ஞாயிறு, 28 டிசம்பர், 2014

மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயகத்தை வழங்க அரசு தவறியுள்ளது தம்பர அமில தேரர்..!!

விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர் அரசாங்கம் ஜனநாயகத்தை பின்பற்ற தவறிவிட்டது. எனவே மக்கள் அரசாங்கத்தின் மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்ப்பதாக ஜெயவர்த்தனபுர பலக்கலைக்கழக அகழ்வாராய்ச்சி விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் நாட்டில் அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை மக்கள் எதிர்பார்த்தனர். எனினும் அவை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

விடுதலைப்புலிகள் செயற்பட்ட காலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அரசாங்கத்துக்கு கஸ்ட நிலை இருந்தது. எனினும் போருக்கு பின்னர் அதனை நிறுவியிருக்க முடியும்.


இந்தக்காலக்கட்டத்தில் வறுமை ஒழிப்பு, குற்றச்செயல்களின் குறைப்பு, கல்வியில் முன்னேற்றம் என்பவற்றையே மக்கள் எதிர்ப்பார்த்தனர் என்றும் தம்பர அமில சுட்டிக்காட்டினார்.

எனினும் எதுவும் இடம்பெறவில்லை. எனவே மக்கள் அரசாங்கத்தில் மாற்றம் வேண்டும் என்று கோருவதாக அமில தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக