ஞாயிறு, 28 டிசம்பர், 2014

போர்க்குற்றத்துக்கு எதிராக இராஜதந்திர போர் பொதுவேட்பாளர் எதிரணி..!!!

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் மூலம் நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக இராஜதந்திர போரை நடத்தப் போவதாக பொதுவேட்பாளர் எதிரணி தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு பொரளை பகுதியில் மைத்திரிபால சிறிசேனவுக்காக வீடுவீடாக சென்று பிரசாரம் நடத்தும் நடவடிக்கையின்போதே ரணவக்க இதனை குறிப்பிட்டார்.


இந்தநிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் மைத்திhபாலவின் தேர்தல் அறிக்கை இலங்கையின் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிகப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

போர்க்குற்றச்சாட்டு தொடர்பி;ல் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என்று மஹிந்தவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொது எதிரணி ஒருபோதும் ஒரு இராணுவ வீரரையும் போர்க்குற்றச்சாட்டின்பேரில் வெளிநாட்டுக்கு அனுப்பாது என்றும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக