எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
பதவிக் காலம் எஞ்சியிருக்கும் போது ஜனாதிபதி தேர்தலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டு, அழைப்பு விடுத்த ஜனாதிபதி தோல்வியடைந்தால் குறித்த ஜனாதிபதி எஞ்சியிருக்கும் பதவிக் காலம் முடியும் வரையில் ஆட்சி செய்ய முடியாது.
ஜனாதிபதி மஹிந்த தோல்வியடைந்தால் எஞ்சியிருக்கும் பதவிக் காலம் வரையில் ஆட்சி செய்ய முடியும் என சில தரப்பினர் செய்து வரும் பிரச்சாரத்தில் உண்மையில்லை.
அரசியல் அமைப்பின் 31-அ என்னும் சரத்தில் பதவிக் காலம் பற்றி
தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் போது பதவி வகிக்கும் ஜனாதிபதி தவிர்ந்த ஏனைய ஒருவர் தேர்தலில் வெற்றியீட்டினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னைய ஜனாதிபதி பதவி இழக்கின்றார்.
இதன்படி புதிய ஜனாதிபதியின் பதவிக் காலம் தேர்தல் வெற்றியீட்டிய திகதியுடன் ஆரம்பமாகின்றது.
தேர்தலில் வெற்றியீட்டி 14 நாட்களுக்குள் ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து கொள்ள முடியும்.
அரசியல் அமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு மக்களை திசை திருப்ப எவரும் முயற்சிக்கக் கூடாது என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியொருவர் தெரிவானாலும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார் என சில தரப்பினர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சரத் என் சில்வா பத்திரிகையொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக