ஞாயிறு, 7 டிசம்பர், 2014

பொலனறுவையிலிருந்து நாட்டை ஆட்சி செய்வேன் மைத்திரிபால..!!!

பொலனறுவையிலிருந்து நாட்டை ஆட்சி செய்யப் போவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் கூட்டமொன்றில் இன்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி நிச்சயமாக நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி.

பொலனறுவை இளைஞர்களை ஜனாதிபதி வேட்பாளராக சந்திக்க முடியும் என நான் கனவிலும் நினைத்ததில்லை.

நிச்சயமாக வெற்றியீட்டும் ஜனாதிபதி வேட்பாளராக உரையாற்ற கிடைக்கும் என நினைத்ததில்லை.



10 – 12 நாட்களில் இலங்கையின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எனது அருமை நண்பர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியீட்டுவேன். வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் ஒருவர் உங்கள் முன்னிலையில் இருக்கின்றார்.

சிறந்த தோல்வியாளர் யார் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.அதனை பற்றி பேச விரும்பவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக