நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவர் சற்றுநேரத்திற்கு முன்னர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் திகாம்பரம் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு திகாம்பரம் தனது ஆதரவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக