புதன், 10 டிசம்பர், 2014

பிரதி அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் இராஜினாமா!!

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் ஆளும் அரசாங்கத்தில் வகிக்கும் தாவரவியல் மற்றும் பொது பொழுதுபோக்கு பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவர் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ராதாகிருஷ்ணன் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு திகாம்பரம் தனது ஆதரவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக