வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் பெற்றோர் தின விழாவும் ஒளி விழாவும் இன்று (12/12) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.
1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமரர் செயலதிபர் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் திருமதி கே.மீரா தலைமையில் நடைபெற்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சமூக ஆர்வலர் திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற பெற்றோர் தின மற்றும் ஒழி விழாவின் பிரதம விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் (விசு) மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், வவுனியா மாவட்ட தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) சிறப்பு விருந்தினராக தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு எஸ்.கோணேஸ்வரலிங்கம் அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக வெங்கலச் செட்டிக்குள பிரதேச சபை உறுப்பினர் திரு க.ஜெகதீஸ்வரன்(சிவம்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் திரு முத்தையா கண்ணதாசன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு பா.பாலேந்திரன், திருநாவற்குள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி திருமதி.சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, ஆசிரியர் ரகுபதி, கிராம அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளர் சர்மா, தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து இன்றைய மழலைகளின் நிகழ்வுகளை சிறப்பித்தனர்.
இவ் நிகழ்வில் மழலைகளின் கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. எமது தேசத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளான காவடி, கரகாட்டம் மற்றும் பாடல்கள், சிறப்பு பேச்சுக்கள் என கண் கவரும் நிகழ்வுகளுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக