வியாழன், 25 டிசம்பர், 2014

சுகாதாரம், கல்வித்துறைகளை வடமாகாண நிர்வாகத்திற்குள் உள்வாங்க நியதிச் சட்டங்கள் உருவாக்கம்..!!

வடமாகாண சபையின் கீழ் முழுமையாக போக்குவரத்து துறையினை கொண்டுவரும் வகையில் போக்குவரத்து அதிகார சபையினை உருவாக்குவதற்கு போக்குவரத்து நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளினை மாகாண நிர்வாகத்திற்குள் கொண்டுவருவதற்கான நியதிச் சட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சுகாதாரத் திணைக்களம் மற்றும் மாகாண கல்வித்திணைக்களம் ஆகியவற்றை மாகாண நிர்வாகத்தின் கீ ழ் செயற்படுத்தும் நியதிச்சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மாகாணசபையினால் பல்வேறு விடயங்களுக்கான நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டும் பல நிறைவேற்றப்பட்டும் உள்ள நிலையில், இந்நிலையில் சுகாதார அமைச்சினால் ஒரு நியதிச்சட்டமும், கல்வியமைச்சினால் இரு நியதிச்சட்டங்களும் உருவாக்கப்பட்டு மாகாண பேரவைச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதில் சுகாதார திணைக்களம், கல்வித்திணைக்களம் என்பவற்றின் நிர்வாக நடைமுறைகளை மாகாண சபையின் கீழ் செயற்படுத்தும் நியதிச்சட்டங்களும் உள்ளடக்கம்.

இவற்றுக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நியதிச்சட்டம் மற்றும் முன்பள் ளிகளைக் கட்டுப்படுத்தும் நியதிச்சட்டம் ஆகியனவும்
உள்ளடக்கம். இந்நிலையில் குறித்த நியதிச்சட்டங்கள் விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக