எதிரணிக் கூட்டணிக்கு புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து பணம் கிடைக்கிறது என்பதை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் தமது மனைவியின் தந்தைக்கு சுவிஸ் பிராங், அமெரிக்க டொலர்கள் என்பவற்றை கொடுத்துள்ளார்.
இதனை இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பணம் எவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நேற்று மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்தார்.
எனவே இந்த பணம் தேர்தலுக்காக புலம்பெயர்ந்தவர்களால் வழங்கப்பட்டது என்பதை மைத்திரிபால ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்தார்.
மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்குவதன் மூலம் வடக்கு கிழக்கை இணைக்க புலம்பெயர்ந்தோர் முயற்சிப்பதாக வீரவன்ச குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக