செவ்வாய், 2 டிசம்பர், 2014

பொகவந்தலாவ தோட்டத்தில் மண்சரிவு! தாயும் மகளும் பலி..!!!

பொகவந்தலாவ லோனினோன் தோட்டத்தில் வீடு ஒன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த தாயும் மகளும் உயிர் இழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 45 வயது மதிக்தக்க தாய் மற்றும் 19வயது பெண் ஆகிய இருவரின் சடலமும் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக