செவ்வாய், 2 டிசம்பர், 2014

ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி...!!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு கடைகள் காணப்படுகின்றன. ஒன்று மஹிந்த ராஜபக்சவின் கடை மற்றையது மைத்திரிபால சிறிசேனவின் கடையாகும்.

மஹிந்தவின் கடையில் காலாவதியான பொருட்களே காணப்படுகின்றன. மஹிந்தவின் கடையில் பொருட்கள் விலை அதிகமானது. அதில் காணப்படும் இனிப்புக்களுக்குள் விசமுண்டு.

சர்வாதிகார ஆட்சி முறைமையை முடிக்குக் கொண்டு வர வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கப்பட வேண்டும்.

ராஜபக்சவின் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த பின்னர், மைத்திரிபாலவின் கடையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றிக் கொள்ள தொடர்ந்தும் போராடுவோம்.

நாட்டுக்கு நல்லாட்சி ஏற்படும் வரையில் போராட்டங்களை கைவிடப் போவதில்லை. மஹிந்தவின் கடையை மூடுவது சுலமானதல்ல.

தேர்தல்களில் ஜனாதிபதி தேர்தலுக்காகவே அதிகளவு பணம் செலவிடப்படுகின்றது.

பலவந்தமான முறையில் அச்சுறுத்தல்களை விடுத்து அடக்குமுறைகளை பிரயோகித்தே ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிக்கப்படுகின்றது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுகோகொடை ஆனந்த சமரக்கோன் அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக