செவ்வாய், 2 டிசம்பர், 2014

மத்தியஸ்தர்களை கௌரவிக்கும் தேசிய விழாவில் வவுனியா அதிபருக்கு கௌரவம்.!!

(ஓவியன்) இலங்கையின் மத்தியஸ்த செயற்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உன்னதமான பணியை வரவேற்கும் பொருட்டு 2014 மார்கழி மாதம் 01 ஆம் நாளன்று இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில்  நடைபெற்ற மத்தியஸ்தர்களை கௌரவிக்கும் தேசிய வைபவத்தின் போது வவுனியா மத்தியஸ்த சபை (262) தவிசாளர் திரு.சிதம்பரப்பிள்ளை  வரதராஜாஅவர்கள் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டார்.


இவர் வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வருவதுடன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைமானிப் பட்டதாரியும், திறந்த பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புக்கள் டிப்ளோமாவும், அத்துடன் முதுகலைமானிப் பட்டதாரியுமாவார். இவர் முன்னாள் ஆசிகுள பதிவாளர் அமரர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் மகனுமாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக