வவுனியா தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் இன்றைய தினம்(14/12) ஆதி விநாயகர் பாலாம்பிகை கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு தமிழருவி சிவகுமார் ஆசிரியரின் தலைமையில் ஆரம்பமானது. தமிழருவி
சிவகுமார் ஆசிரியரின் "நாவலர்" பட்டம் பெற்ற பின்னரான முதலாவது நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும் தற்போது நோர்வேயில் வசித்து வரும் விஜேந்திரனின் கவிதை நூல் மற்றும் இறுவெட்டு வெளியீடு வெகு சிறப்பாக நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் முன்னாள் வவுனியா நகர சபையின் நகர பிதா திரு எஸ்.என்.ஜி.நாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), துணுக்காய் உதவி பிரதேச செயலாளர் குணபாலன், சட்டத்தரணி தயாபரன், லயன் பாலேந்திரன், கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின் கலைக் கல்லூரி இயக்குனர், செந்தணல் வெளியீட்டக நிர்வாகிகள், சமய ஆர்வலர் தேவராஜா, வடமாகாண மீன்பிடி துறை அமைச்சின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன்,சமூக ஆர்வலர் செந்தில், ஊடகவியலாளர் சந்திரபத்மன் பாபு, வெகுஜென அமைப்பாளர் பிரதீபன் என பல சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக